உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., அணிகளுக்கு இன்று பயிற்சி வகுப்பு

தி.மு.க., அணிகளுக்கு இன்று பயிற்சி வகுப்பு

செஞ்சி : செஞ்சியில் தி.மு.க., அனைத்து அணிகளுக்கும் பயிற்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.இதுகுறித்து தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் அறிக்கை:விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி உட்பட அனைத்து அணிகளின் பயிற்சி வகுப்பு இன்று 13ம் தேதி செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள தனலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடக்கிறது.இதில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நகர மன்ற, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை