உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி பஸ் மீது லாரி மோதல்; 5 மாணவர்கள் காயம்

பள்ளி பஸ் மீது லாரி மோதல்; 5 மாணவர்கள் காயம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளி பஸ் மீது டிப்பர் லாரி மோதியதில் 5 மாணவர்கள் காயமடைந்தனர்.புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் தனியார் பள்ளி பஸ் நேற்று மாலை 4:15 மணிஅளவில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பஸ்சை மதுரப்பாக்கம் டிரைவர் ஜெயக்குமார், 48; ஓட்டினார்.பஸ், எம்.குச்சிபாளையத்திலிருந்து இளையாண்டிப்பட்டு ரோட்டில் வீடூர் நோக்கி செல்ல திரும்பிய போது, விழுப்புரத்திலிருந்து திருக்கனுார் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி, பஸ் மீது மோதி சாலையோர மின் கம்பத்தில் மோதியது.இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள், வீடூர் புருேஷாத்தம்மன் மகள் புருஷா, 13; தரனேந்திரன் மகன் தர்ஷன், 7; விக்னேஷ் மகன் அதர்வா, 4; பாலசுப்ரமணியன் மகள் ஹரிணி, 10; அரிகரன், 5: ஆகிய 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.விபத்து குறித்து, விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை