காசநோய் விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை போலீசாருக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் பயற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., ஞானவேல் வரவேற்றார். காசநோய் பிரிவு மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சுதாகர் பங்கேற்று, காசநோய் பரவும் முறைகள், தடுக்கும் விதம் குறித்து பேசினார். இந்நிகழ்வில், டாக்டர் இமயாதேவி, காசநோய் பணியாளர்கள், ஆயுதபடை போலீசார் பலர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அதிநவீன எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் அதிநவீன சீபி நாட் சளி பரிசோதனையும் செய்யப்பட்டது.