மேலும் செய்திகள்
மின் மோட்டார் திருட்டு போலீஸ் விசாரணை
29-Sep-2025
கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமிக்கு, 2 வாலிபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் மகன் ராகவன், 21; அவரது சகோதரர் கி ரி, 19; ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
29-Sep-2025