மேலும் செய்திகள்
பெயின்டர் முகத்தை வெட்டி சிதைத்து கொலை
16-Oct-2025
வானுார்: ஆரோவில் அருகே கொலை முயற்சி வழக்கில், தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் அரும்பார்த்தபுரம் ஜி.என்.பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவருடைய மனைவி திலகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், மனைவியை பிரிந்து மணிகண்டன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் மணிகண்டன், காரில் வீட்டில் இருந்து நாவற்குளம் பகுதிக்கு சென்றபோது, அவரை மர்ம ஆசாமிகள் இருவர் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். அதில் பலத்த காயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஆரோவில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த மணி (எ) மணிகண்டன், 31; அவரது மைத்து னரான வெள்ளை (எ) ராஜ்கமல், 28; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், திலகாவின் தங்கையான திருமணமான மஞ்சுவிடம் மணிகண்டன் நெருங்கி பேசி வந்துள்ளார். இதையறிந்த மஞ்சுவின் கணவர் மணி, மைத்துனர் ராஜ்கமல் ஆகியோர் மணிகண்டனை அழைத்து கண்டித்துள்ளனர். அதை பெரிதாக கருதாமல், மணிகண்டன், தொடர்ந்து மஞ்சுவிடம் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணி, ராஜ்கமல் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த தீபாவளியில் இருந்து மணிகண்டனை இருவரும் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் புதுச்சேரி கோரிமேடு அருகேயுள்ள தமிழக பகுதியான பட்டானுார் நாவற்குளம் பகுதியில் செல்வதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை பின் தொடர்ந்த மணி, ராஜ்கமல் இருவரும் சேர்ந்து, வழிமறித்து மணிகண்டனை சராமரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து கத்தி, இரு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16-Oct-2025