உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குளத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதி இருவர் பலி

குளத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதி இருவர் பலி

அவலுார்பேட்டை: குளத்தின் தடுப்பு சுவரில் பைக் மோதி, சிறுவன் உட்பட இருவர் இறந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டியைச் சேர்ந்தவர் முருகன். வி.ஏ.ஓ.,வான இவர், சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்தார். கருமகாரியம் நேற்று நடந்தது. இதற்காக, நேற்று முன்தினம் இரவு, சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு வந்த முருகனின் உறவினர்களான சிந்தகம்பூண்டியைச் சேர்ந்த வீராசாமி மகன் நதீஷ், 19, பிரபு மகன் அஸ்விந்த், 16, கள்ளப்புலியூர் ரேணுகுமார் மகன் விஷால், 16, ஆகிய மூவரும் ஸ்பிளண்டர் பைக்கில் மேல்மலையனுார் சென்றனர். இரவு, 10:00 மணிக்கு மேல்மலையனுார் அக்னி குளம் சாலை வளைவில் வேகமாக பைக் திரும்பியபோது, நிலை தடுமாறி குளத்தின் தடுப்புச்சுவரில் பைக் மோதியது. இதில், நதீஷ், அஸ்விந்த் உயிரிழந்தனர் மேல்மலையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ