உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழனிசாமியுடன் சேர வாய்ப்பில்லை: தினகரன் திட்டவட்டம்

பழனிசாமியுடன் சேர வாய்ப்பில்லை: தினகரன் திட்டவட்டம்

திண்டிவனம், : 'பழனிசாமியுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை' என அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.திண்டிவனத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பா.ஜ., பூஜ்யமாகி விடும் என்று கூறி உள்ளார். எதையும் மக்கள்தான் முடிவு செய்வார்கள். தேர்தலுக்கு பிறகு யார் பூஜ்யம் என்று தெரியவரும். இந்தியா கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக விலகி வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார்.பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். பழனிசாமியுடன் சேருவதற்கு வாய்ப்பில்லை.கொடநாடு கொலை நடந்த சமயத்தில் பழனிசாமி ஆட்சி இருந்தது. இவ்வழக்கில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். காவல் துறை அதையும் மீறி முழு மூச்சாக விசாரணையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறை நன்றாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு தினகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை