உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா

செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா

செஞ்சி: செஞ்சியில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் அவதார தின விழா நடந்தது. செஞ்சி, திருவண்ணாமலை சாலையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலாரின் 202வது அவதார தின விழா நடந்தது. இதையொட்டி அகவல் வழிபாடு, சன்மார்க்க சங்க கொடியேற்றுதல், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் வள்ளல் பெருமானின் அவதார நோக்கம் என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. சன்மார்க்க சங்க தலைவர் தணிகாசலம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பழனி, கோபி முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், நுாலை வெளியிட்டு, அன்னதானத்தை துவக்கி வைத்தார். அங்கராயநல்லுார் தர்ம சாலை நிறுவனர் பாண்டியன் நூலை பெற்றுக் கொண்டார். சட்ட ஆலோசகர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இதில் சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ