வேன் டிரைவர் தற்கொலை
விழுப்புரம்: வேன் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவெலியை சேர்ந்தவர் விஜயகாந்த், 43; வேன் டிரைவர். இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகிறது. இவரது மனைவி கலைவாணி என்பவர், 6 மாதம் முன் விஜயகாந்தை விட்டு பிரிந்து சிறுவந்தாட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று (நவ.,20) விஜயகாந்த் தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.