மேலும் செய்திகள்
வருவாய்த்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
19-Aug-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், வி.ஏ.ஓ., பணி மாறுதலுக்கான தவறான முதுநிலை பட்டியலை ரத்து செய்து, சரியான பட்டியல் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று பணியை புறக்கணித்து போராட்டம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 9 தாலுகாக்களில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றதால், சான்றிதழ் வழங்கும் பணி, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டன.
19-Aug-2025