உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வி.சி., கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் வி.சி., கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் பெரியார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரவணன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., கண்டன உரையாற்றினார். போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னணி பொதுச்செயலாளர் கணேசன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்பை, மத்திய அரசு தீவிர பேரிடராக அறிவிப்பதுடன், போதிய நிவாரண நிதியை வழங்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், முறைகேடுகளைத் தவிர்க்கும் விதமாக, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி