உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., கட்சியினர் இருசக்கர வாகன பிரசாரம்

வி.சி., கட்சியினர் இருசக்கர வாகன பிரசாரம்

செஞ்சி: நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் வி.சி., கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் நடந்தது. வி.சி., கட்சி சார்பில் இம்மாதம் 26ம் தேதி திருச்சியில் 'வெல்லும் ஜனநாயக மாநாடு' நடைபெற உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன பிரசார பேரணி வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தனசெழியன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் செஞ்சி அரசு, மாநில துணை செயலாளர்கள் துரைவளவன், இனியவளவன், அம்பேத்சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வல்லம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மண்டல செயலாளர் செல்வம் இருசக்கர வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தார். பொது செயலாளர் ரவிக்குமார் எம்.பி., நிறைவுரை நிகழ்த்தினார். வெற்றிவளவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை