உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., தெருமுனை பிரசார கூட்டம்

வி.சி., தெருமுனை பிரசார கூட்டம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி.சி., மாநாடு குறித்த தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு நடைபெற உள்ளது. அதனையொட்டி, விக்கிரவாண்டி அடுத்த விசாத்தனுார், விக்கிரவாண்டி, ராதாபுரம், நேமூர் ஆகிய இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் திலீபன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வெற்றிவேந்தன், ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்தர் வரவேற்றார். விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார் மாநாடு நோக்கம் குறித்து பேசினார்.மேலிட பொறுப்பாளர் திருவேங்கடம், மாவட்ட துணை அமைப்பாளர் கிட்டு, பரசுராமன், ஒன்றிய கவுன்சிலர் ஏகாம்பரம் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி