மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
19 hour(s) ago
நாளை மின்தடை
19 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
19 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
19 hour(s) ago
திண்டிவனம்: திண்டிவனம் அருகே தென்நெற்குணம் பகுதியில் சிமெண்ட் சாலை போட வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் அருகே தென்நெற்குணம் கிராம பஞ்சாயத்தில், 6வது வார்டிலுள்ள மாதாக்கோவில் முதல் மாரியம்மன் கோவில் தெரு வரையில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு தாரர்களால் சாலை போட முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் தாசில்தார் உத்தரவின் பேரில், சர்வேயர் மூலம் அளந்து கல் நட்டப்பட்டது. இந்த கல்லை சிலர் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகின்றது.இதை தொடர்ந்து 6வது வார்டு உறுப்பினர் ராஜீ தலைமையில் பொதுமக்கள் திண்டிவனம் தாலுா கா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதை தொடர்ந்து தாசில்தார் சிவா நடத்திய பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago