மேலும் செய்திகள்
தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து
01-May-2025
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புகண்டமங்கலம் மே 13- கண்டமங்கலம் ஒன்றியம் பி.எஸ் பாளையம் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, கிராம மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம், வாதானுார் ஊராட்சிக்குட்பட்ட பி.எஸ் பாளையம், அம்பேத்கர் நகர் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தெரு மின் விளக்குகளும் எரியவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மககள் நேற்று காலை 8;00 மணிக்கு, மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில், தமிழக-புதுச்சேரி எல்லைப்பகுதியான பி.எஸ் பாளையம் நான்கு முனை சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டம் நடந்த இடம் புதுச்சேரி பகுதி என்பதால், திருபுனை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கதிரேசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வாதானுார் ஊராட்சி தலைவர், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் மற்றும் பி.டி.ஓ.,களிடம் பேசி, குடிநீர் மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று, காலை 9:00 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
01-May-2025