| ADDED : ஜூலை 26, 2011 11:48 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யூ., சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரதத்திற்கு சங்க தலைவர் மாரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி எம். எல்.ஏ., ராமமூர்த்தி போராட் டத்தை துவக்கி வைத்தார். பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் குமார், சுப்பிரமணியன், பூவராகவன், மூர்த்தி, அண்ணாமலை, வீராசாமி உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.கள்ளக்குறிச்சி நகர தள்ளுவண்டி, சிறு பழவியாபாரிகளின் பழக்கடைகளை அப்புறப்படுத்திய போலீசாரின் நடவடிக்கைகள் கண்டிக்கதக்கது. தள்ளுவண்டி பழ வியாபாரிகளின் வாழ்வுரிமையை பாது காக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர். தாஜ்தீன் நன்றி கூறினார்.