உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காலாவதி அப்பளம் விற்பனை செய்த மளிகை கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

காலாவதி அப்பளம் விற்பனை செய்த மளிகை கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

விழுப்புரம், : காலாவதி அப்பளம் விற்ற மளிகை கடைக்கு அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.விழுப்புரம் அடுத்த வேடம்பட்டை சேர்ந்தவர் பாவாடை மகள் திவ்யா. இவர், கடந்த 31.5.2022ம் தேதி, பண்ருட்டியில் உள்ள விநாயகா டிரேடர்ஸ் கடையில் 13 அப்பள கட்டுகள் வாங்கினார்.திவ்யா வீட்டிற்கு சென்று, அப்பளத்தை பொறிக்க எடுத்தபோது மூன்று அப்பள கட்டுகள் காலாவதியாகி இருந்தது. சில கட்டுகள் எடை குறைவாக இருந்தது. உடன் அவர், கடைக்கு சென்று அப்பள கட்டுகளை மாற்றி கேட்டார். அதற்கு கடைக்காரர் அப்பளம் மதுரையில் இருந்து வருகிறது. பேக்கிங் பிரித்துவிட்டதால் மாற்றி தர முடியாது என்றார்.இதுகுறித்து திவ்யா, விழுப்புரம் நுகர்வோர் பொதுநல சங்க மாநில தலைவர் ஆரோக்கியசாமி மூலமாக, மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த அப்பளம் தயாரிப்பாளர் மற்றும் அவரது பண்ருட்டி முகவர் விநாயகா டிரேடர்ஸ் மீதும், விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் காலாவதியான அப்பள கட்டுகளை விற்பனை செய்த பண்ருட்டி விநாயகா டிரேடர்ஸ் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ