உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூதாட்டி தாலி செயின் திருடிய இளைஞர் கைது

மூதாட்டி தாலி செயின் திருடிய இளைஞர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள்,62. தயிர் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இவரது கழுத்திலிருந்த ஒன்னரை சவரன் தாலி சங்கிலியை அதே பகுதியை சேர்ந்த சங்கர், 26 என்பவர் அபகரித்துச் சென்றார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, சங்கரை கைது செய்தனர். அவரிடமிருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாலி சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை