உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி

மயிலம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி

மயிலம் : மயிலம் பொறியியல் கல்லூரியில், பள்ளிகளுக்கு இடையிலான, வரதன் நினைவுக் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் கேசவன், மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து திண்டிவனம் டி.எஸ்.பி., குப்புசாமி பேசும்போது, 'மாணவர்கள் கல்வியில் காட்டும் அதே ஈடுபாட்டை விளையாட்டுகளிலும் காட்ட வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும்' என்றார்.

வரும் ஆகஸ்ட 6ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு தொடரில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், மாவட்டங்களை சேர்ந்த 98 பள்ளிகள் கலந்து கொள்கின்றன. இத்தொடரில் மாணவர்களுக்கு கிரிக்கெட், கைப்பந்து போட்டிகளும், மாணவிகளுக்கு கோ-கோ, த்ரோ-பால் போட்டிகளும் நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ