உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சி : செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் 108 முறை கோவிலை வலம் வந்தனர். இதேபோல் அனந்தபுரம் அருகே உள்ள பனமலை தாளகீரீஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு பால், தேன் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்தனர். தேவாரம், திருவாசகம் படித்து சிறப்பு அர்ச்சனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை