உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாக்கடை சுத்தம் செய்த தே.மு.தி.க., தொண்டர்கள்

சாக்கடை சுத்தம் செய்த தே.மு.தி.க., தொண்டர்கள்

கள்ளக்குறிச்சி : நகராட்சி நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்படாமல் தேங்கி இருந்த சாக்கடை நீர் கழிவுகளை தே.மு. தி.க., வினர் சுத்தம் செய்தனர்.கள்ளக்குறிச்சி உழவர் சந்தை முன்பு சில மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி இருந்தது. அப்பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசியும் நகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. இதனையடுத்து தே.மு.தி.க., நகர செயலாளர் குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கருணாகரன், அவைத்தலைவர் சுப்ரமணி, நகர பொருளாளர் இளையராஜா, நகர துணை செயலாளர் சையத்சர்தார், ஜானகி ராமன், சக்திவேல் உட்பட தொண்டர்கள் சாக்கடை நீர் கழிவுகளை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை