உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்: கலெக்டர் அறிவுரை

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்: கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் : தாய்ப்பால் உடல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி மூளை வளர்ச்சிக்கும் உகந்ததென கலெக்டர் மணிமேகலை அறிவுறுத்தி பேசினார்.உலக தாய்ப்பால் வார விழா வளவனூரில் நேற்று நடந்தது. செயல்விளக்க அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார். ஊட்டச்சத்து திட்ட அலுவலர் பிரபாவதி, சமூக நல அலுவலர் சந்தியாமகேஷ்வரி முன்னிலை வகித்தனர். கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியதாவது:தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து ஊட்டச்சத்து பணியாளர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் தெரிந்து விழிப்புணர்வு பெற வேண்டும். தாய்ப்பால் உடல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி மூளை வளர்ச்சிக்கும் அவசியமாகிறது.தாய்ப்பால் பருகுவதால் பிற்காலத்தில் குழந்தைகள் நன்கு படிப்பறிவுடன் செயல்படும். உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்.குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின் இணை உணவுகளை வழங்கலாம்.இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்