| ADDED : ஆக 07, 2011 01:37 AM
திண்டிவனம் : இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக ஆய்வுக் குழுவினர் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தை பார்வையிட்டனர்.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தமிழகத்தில் 30 மாவட்டங்களில் வேளாண் அறிவியல் நிலையங்களை நிறுவியுள்ளது. இதன் செயல்பாடுகள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வல்லுனர் குழு மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. தென் மண்டத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.தேசிய வேளாண்மை புதினங்கள் கண்டுபிடிப்பு திட்ட முன்னாள் இயக்குனர் டாக்டர் மிருதஞ்ஜெயா தலைமையிலான வல்லுனர் குழுவினர் திண்டிவனத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை ஆய்வு செய்தனர்.நிலையத்தின் செயல்விளக்க திடல்கள், ஆராய்ச்சிக்கூடங்கள் மற்றும் வயல்வெளி இடுபொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட முன்னோடி உழவர்கள், தொழில் முனைவோர் அமைத்திருந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக் கலைத்துறை இயக்குனர் பன்னீர்செல்வம், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் விக்ரமன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.வேளாண் துறையைச் சேர்ந்த கலைச்செல்வன், பிரபுகுமார், பிரபு, நடராஜன், செந்தில்வேல், ரேணுகா, ரமேஷ், மேலாளர் அமுதா உடனிருந்தனர். ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.