| ADDED : ஆக 28, 2011 11:18 PM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் தாலுக்கா அலுவலகத்தில் திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை தாலுக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை டாக்டர் கவிதா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் செந்தில்குமார், தண்டபாணி மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கினர். கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கி தேர்வான 71 மாற்றுத் திறனாளி களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கி தாலுக்கா அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். தனித்துணை ஆட்சியர் நாகராசு, தாசில்தார் பார்வதி, சமூகநல தனி தாசில்தார் பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.