உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் ஊர்வலத்தின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் : கலெக்டர் தலைமையில் முடிவு

விநாயகர் ஊர்வலத்தின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் : கலெக்டர் தலைமையில் முடிவு

விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 1ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., லிங்கம், தாசில்தார் ஜவகர், பரந்தாமன், டவுன் டி.எஸ்.பி., சேகர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துபவர்கள் சம்மந்தபட்ட போலீஸ் ஸ்டேஷனில் விவரம் அளிக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் வழக்கமாக செல்லும் வீதியின் வழியாக கொண்டு செல்ல வேண்டும். சிலைகளை கடலில் கரைக்கும் போது அவற்றின் மேலே உள்ள துணிகள் மற்றும் அலங்கார பொருட்களை கரையில் அப்புறப்படுத்திட வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். ஊர்வலத்தின் போது வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை