| ADDED : ஆக 29, 2011 10:20 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் டவுன் அரிமா சங்கம் சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. சங்கராபுரம் அரிமா சங்கம் சார்பில் சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் ஷபி வரவேற்றார். பள்ளி வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.இ.ஓ., கோலக்காரன், ஆசிரியர்கள் வேல்முருகன், பட்டுராஜன், முனுசாமி, ராஜேந்திரன் கலந்து கொண்டனர். சங்கராபுரம் வட்டத்தில் பழையனூர், ராமராஜாபுரம், தேவபாண்டலம் தாகூர் பள்ளி, தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கராபும் அல் அமீன் பள்ளி உள்ளிட்ட இடங்களில் 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.