உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழ்ச் சங்கம் துவக்க விழா

தமிழ்ச் சங்கம் துவக்க விழா

விழுப்புரம் : விழுப்புரம் வி.ஆர்.பி.,மேல் நிலைப் பள்ளியில் மயிலம் தமிழ்ச் சங்கம் துவக்க விழா நடந்தது. திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சற்குணம் தலைமை தாங்கினார். சதுரங்கப்பட்டினம் அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் சக்கரவர்த்தி வரவேற்றார். கீழ்பென்னாத்தூர் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி பேராசிரியர் சம்பத், தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு, பட்ட மேற்படிப்பு மைய இணை பேராசிரியர் இளங்கோ, ஊட்டி அரசு கலைக் கல்லூரி இணை பேராசிரியர் ஆத்ம ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். வேட்டவலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ