உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமூகநீதி பாதுகாப்பு இயக்கம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

சமூகநீதி பாதுகாப்பு இயக்கம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

விழுப்புரம் : அன்னா ஹசாரேவின் கோரிக்கையை நிறைவேற்ற முன் வந்த மத்திய அரசுக்கு சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கூட்டத்திற்கு சமூக நீதி பாதுகாப்பு இயக்க தலைவர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற அனைத்துநிலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் சஞ்சீவிராயன், சேம்பர் ஆப் காமர்ஸ் ராமநாதன் முன்னிலை வகித்தனர். அரிமா சங்கம் குபேரன், கம்பன் கழக தலைவர் பாலசுப்ரமணியம், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரிமுத்து உட்பட பலர் பேசினர். சமூக நல கூட்டமைப்பு தலைவர் பலராமன், ஐக்கிய ஜமாஅத் கவுரவ ஆலோசகர் சாகுல் அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை