உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி

ஆசிரியர் கழக நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி

விழுப்புரம் : ஆசிரியர்கள் கழகத்தினர் பள்ளி கல்வித்துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் புதிதாக 34 ஆயிரத்து 36 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்காக தமிழ்நாடு அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி கலை ஆசிரியர்கள் கழகத்தினர் முதல்வர் ஜெ., மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் பள்ளி கல்வித்துறை அமைச் சர் சண்முகத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.தமிழாசிரியர் கழக பொதுச்செயலாளர் அண்ணாமலை, கலை ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி, மகளிரணி செயலர் அகிலா, இடைநிலை ஆசி ரியர் சங்க தலைவர் மாரியராஜ், பொதுச்செயலாளர் பீட்டர், நிர்வாகிகள் ஜோசப், செல்வம், மோகன்தாஸ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்