உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பென்சனர்கள் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட கூட்டம்

பென்சனர்கள் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட கூட்டம்

விழுப்புரம் : அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாவட்ட கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு துணை தலைவர் சரவணபவன் தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி காண்டீபன் வரவேற்றார். செயலாளர் சேது விவேகானந்தன் வரவு-செலவு தாக்கல் செய்தார். பொருப்பாளர் விஜயன், வட்டார பொறுப்பாளர்கள் கண்ணன், துரைக்கண்ணு, கோலியனூர் தலைவர் திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினர். தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஊதியத்திற்கான அரசாணை மற்றும் பென்சனர்கள் கிரேட் பே ஆகிய அரசாணைகளை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் தனராஜகோபால் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை