உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரிகள், கார்கள் நிறுத்தும் இடமாக மாறிய விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகம்

லாரிகள், கார்கள் நிறுத்தும் இடமாக மாறிய விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகம்

விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில், லாரி, கார்கள் நிறுத்தப்படுவதால் பஸ் டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. மிக பெரிய அளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, மதுரை, கோவை என முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய சந்திப்பாக விழுப்புரம் பஸ் நிலையம் அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்து செல்லும், பஸ் நிலைய வளாகத்தில், ஆங்காங்கே சரக்கு வாகனங்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் சோதனையின் போது, கனிம வள கடத்தல் காரணமாக பறிமுதல் செய்யப்படும் லாரிகள், பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுகின்றன.இதேபோல், சாலை விபத்தில் சேதமடைந்த கார், இரு சக்கர வாகனங்களும் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சை கண்டறிய முடியாத அளவில் நெரிசல் ஏற்படுகிறது.இதனால் டவுன் பஸ்கள் முறையாக உள்ளே வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பஸ் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, போலீசார் ஒத்துழைப்புடன் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை