உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேருக்குரூ.3 லட்சம் செலவில் பாதுகாப்பு தகடு

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேருக்குரூ.3 லட்சம் செலவில் பாதுகாப்பு தகடு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் பாதுகாப்புக்காக தகடு பொருத்துவதற்காக 3 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் துவங்கியது.ரிஷிவந்தியத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பெருமை வாய்ந்த தேர் உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேரோட்டத்தின் போது தெருவோர பள்ளத்தில் சக்கரம் இறங்கியதால் தேர் குடை சாய்ந்து சேதமடைந் தது. அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகள் தேரோட்டம் நடக்கவில்லை. இது குறித்து தினமலரில் தொடர் செய்தி வெளி யானதை தொடர்ந்து தேரை செப்பனிட்டு புதுப்பிக்க அறநிலையத்துறை 12.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.பணிகள் மேற்கொள்ளப்பட்டு செப்பனிடப்பட்ட தேர் புதுப்பொலிவுடன் 61 அடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டது. கடந்த 2010 ம் ஆண்டு பிரம்மோற்சவத்தில் புதிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகத்துடன் இழுத்து சென்றனர். திருவிழா முடிந்ததும் வெட்டவெளியில் தேர் நிறுத்தப்பட்டதால் மழை, வெயிலில் சேதமடையும் நிலை ஏற்பட்டது. இதனால் கலை நயத்துடன் செய்யப்பட்டிருந்த பழமையான மரச்சிற்பம் வீணாகும் நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து அதன் எதிரொலியாக, தேரை சுற்றிலும் பாதுகாப்பு தகடுகள் பொருத்துவதற்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதன்படி 3.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த மாதம் தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில் தற்போது தேரை சுற்றிலும் பாதுகாப்பு இரும்பு தகடுகள் பொருத்தும் பணி செயல் அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் நடந்து வரு கிறது. ஒவ்வொரு ஆண் டும் பிரம்மோற்சவத் தின் போது தகடுகள் அகற்றப் பட்டு தேரோட்டம் நடத் தப்படும். அதுவரை நூற் றாண்டு பழமை யான தேர் தகுந்த பாது காப் டன் நிலையில் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை