உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா

இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா

விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் இந்தியன் வங்கி சுயஉதவிக்குழு கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல பொது மேலா ளர் உலகன் தலைமை தாங்கினார். சுயஉதவிக்குழு விழுப்புரம் கிளை மேலாளர் ஜென்னி மார்க்ஸ், முன்னோடி வங்கி மேலாளர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் பத்மாவதி வரவேற்றார்.கலெக்டர் மணிமேகலை திறந்து வைத்து பேசுகையில், நகர்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கு குறைந்த வருவாயில் சேமித்து வைக்கும் வங்கியாக செயல்படுகிறது. இந்த வங்கியில் மகளிர் குழுக்கள் பெறும் கடனை சரியாக திரும்ப செலுத்தி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றார்.மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தொழில் துவங்க கடனுதவியை கலெக்டர் மணிமேகலை வழங்கினார். புதுச்சேரி உதவி மேலாளர் சாந்தா, முன்னோடி வங்கி மேலாளர் சண்முகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை