உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலக்கிய இதழ் வெளியீட்டு விழா

இலக்கிய இதழ் வெளியீட்டு விழா

விழுப்புரம் : விழுப்புரம் பாவேந்தர் பேரவை சார்பில் இலக்கிய இதழ் வெளியீட்டு விழா நடந்தது.விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பாவேந்தர் பேரவை துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேலூர் கேரள சமாஜம் தலைவர் ராதாகிருஷ்ணன், சுரேஷ், சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். துணை செயலர் கிரி வரவேற்றார்.கள்ளக்குறிச்சி ஆர்.கே.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் டாக்டர் மகுடமுடி 'ஐ' என்ற புதிய இலக்கிய இதழை வெளியிட, பாவேந்தர் பேரவை துணைத் தலைவர் தனவிஜயகுமார் பெற்றுக் கொண்டார்.பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கோகுல், ரவிகார்த்திகேயன், மன்றவாணன், அமீபுதீன் கலந்து கொண்டனர். முன்னதாக ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் நடந்த பட்டி மன்றத்தில் ஆசைத்தம்பி, ராமமூர்த்தி, உலக துரை பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி