உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிட நலப்பள்ளி ஆசிரியர் களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங் களுக்கான 2011 -2012ம் கல்வியாண்டில் கலந்தாய்வு மூலம் மாறுதல், பதவி உயர்வு மூலம் மாறுதல் வழங்கவும் கலந்தாய்வு கூட்டம் டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. கலந்தாய்வில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ராஜாத்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ