உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே மருத்துவமனையில் மஞ்சள் காமாலை பரிசோதனை

ரயில்வே மருத்துவமனையில் மஞ்சள் காமாலை பரிசோதனை

விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையில் மஞ்சள் காமாலை விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது.முகாமிற்கு ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி உலகநாதன் தலைமை தாங்கி, மஞ்சள் காமாலை விழிப்புணர்வு குறித்து பேசினார். மருந்தாளுனர் சரவணன் வரவேற்றார். ரயில்வே பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் மஞ்சள் காமாலை நோய் வரும் முன் காக்க போடப்படும் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.முகாமில் ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் ரயில்வே பள்ளி மாணவ, மாண விகள் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. ரயில்வே மருத்துவமனை அதிகாரி அர்ச்சனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை