உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் நர்சிங் மாணவர்களுக்கு அரசு டாக்டர் அறிவுரை

அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் நர்சிங் மாணவர்களுக்கு அரசு டாக்டர் அறிவுரை

கள்ளக்குறிச்சி : நர்சிங் மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென அரசு டாக்டர் பழமலை அறிவுரை வழங்கினார்.கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஸ்ரீ லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் முருகப்பன் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சுமதி வரவேற்றார்.இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் உதவி டாக்டர் பழமலை பேசியதாவது:மருத்துவ பணி என்பது மனித உயிர்களை காக்கும் மகத்தானது. பிறருக்கு சேவை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மாணவர் பருவத்திலேயே பல்வேறு சேவைகளை செய்து மாண்புடன் வாழகற்றுக் கொள்ளுங்கள். ஏராளமானவர்களின் உயிர்காக்க ரத்த தானம் செய்து பிறருக்கு உதவுங்கள். படித்து முடித்து பணி செய்யும் காலத்தில் ஏழை மக்களின் சுகாதாரமான வாழ்வுக்கு உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். நர்சிங் மாணவர்கள் மனித உயிர்களை காக்கும் மகத்தான சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு டாக்டர் பழமலை பேசினார்.ஸ்ரீ லஷ்மி கலை அறிவியல் ல்லூரி முதல்வர் முத்தழகி, கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், துணை முதல்வர் சந்துரு, ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், சேஷாத்திரி, விக்டர் கிருபைராஜன் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் அசோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை