உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்தது

பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்தது

திண்டிவனம் : விக்கிரவாண்டி அரசு பஸ் மோதியதில் டிராக்டர் கவிழ்ந்தது. விழுப்புரம் தாலுகா விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்மணி. 28. இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது டிராக்டரில் டிப்பர் இணைத்து கோலியனூரில் இருந்து விக்கிரவாண்டிநோக்கி சென்றார். கம்பியாம்புலியூர் தனியார் கல்லூரி அருகே பின்னால் வந்த அரசு பஸ் திடீரென டிப்பர் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் எஞ்சின் உடைந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்மணி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் பஸ் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை