உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தியாகதுருகம் ஒன்றியத்தில் 146 வேட்பாளர்கள் மனு தாக்கல்

தியாகதுருகம் ஒன்றியத்தில் 146 வேட்பாளர்கள் மனு தாக்கல்

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் 146 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். தியாகதுருகம் ஒன்றியத்தில் 40 ஊராட்சி தலைவர்கள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 297 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி வரும் 29ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது.நேற்று மதியம் அமாவாசை துவங்கியதால் பல ரும் மனு அளிக்க தங்கள் ஆதரவாளர்களுடன் வாகனங்களில் பி.டி.ஓ., அலுவலகம் வந்திருந்தனர்.

நேற்று மட்டும் ஊராட்சி தலைவர் பதவிக்கு 41 பேரும், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 10 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 95 பேரும் மொத்தம் 146 பேர் மனுதாக்கல் செய்தனர். இதுவரை 256 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முத்துமீனாள், ராசாத்தி, மோகன் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இதுவரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை. அதேபோல்பேரூராட்சி தலைவர் பதவி, கவுன்சிலர் பதவிக்கு தலா ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று அமாவாசை என்பதால் பெரும்பாலானோர் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி