| ADDED : செப் 26, 2011 10:40 PM
விழுப்புரம் : உள்ளாட்சி தேர்தல் ஏலம் நடந்ததாக எழுந்த பிரச்னை குறித்து நடவடிக்கை கோரி ஊர் மக்கள் எஸ்.பி., யிடம் புகார் மனு கொடுத்தனர். திருக்கோவிலூர் அருகே உள்ள காடகனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு உறுப்பினர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்தது. அங்கு வார்டு உறுப்பினருக்கு போட்டியிட முயன்ற ஜெகன்னாதன், வார்டு பதவிகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், தான் போட்டியிட ஊரில் எதிர்ப்பு உள்ளதாக போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று ஊராட்சித் தலைவர் பூங்காவனம் தலைமையில் கிராம மக்கள் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில், ஊரில் உள் ளாட்சி தேர்தல் பணிகள் அமைதியாக நடந்து வரும் நிலையில், வார்டு பதவிக்கு போட்டியிட வந்த ஜெகன்னாதன் என்பவர், பதவிகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக பிரச்னை ஏற்படுத்தி போலீசில் பொய் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் ஊர் மக்களை மிரட்டி கலவரத்தை தூண் டும் வகையில் செயல்பட்டு வருகிறார். இது குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டு மென புகார் மனுவில் தெரிவித்திருந்தனர். மனு வைப் பெற்ற எஸ்.பி., பாஸ்கரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.