உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., வழக்கறிஞர்கள் 2 நாள் கோர்ட் புறக்கணிப்பு : அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் வழக்கம்போல் "பிரசன்ட்

தி.மு.க., வழக்கறிஞர்கள் 2 நாள் கோர்ட் புறக்கணிப்பு : அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் வழக்கம்போல் "பிரசன்ட்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தி.மு.க., வழக்கறிஞர் மீது வழக்கு போடப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ள இடத்தை தன்னிடமிருந்து மிரட்டி வாங்கியதாக அ.தி.மு.க., வைச்சேர்ந்த மதுரைக்கண்ணு புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, செஞ்சி பேரூராட்சி சேர்மன் மஸ்தான், தி.மு.க., வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது நிலமோசடி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் மீது வழக்கு போட்டுள் ளதை கண்டித்தும், அவர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்ப பெற வலியுறுத்தியும் விழுப்புரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இரண்டு நாட்கள் கோர்ட் நடவடிக்கையை புறக்கணிப்பதாக நேற்று தெரிவித்தனர். இதற்கிடையே அ.தி. மு.க., சார்பு வழக்கறிஞர்கள் நேற்று வழக்கம்போல் கோர்ட் பணிகளில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ