உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கேபிள் "டிவி ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

கேபிள் "டிவி ஆபரேட்டர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் அரசு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாவட்ட செயலாளர் ராஜமோகன் தலைமை தாங்கினார். கேசவன் வரவேற்றார். கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி பணம் பறித்து வந்த டி.டி.எச். சேவைகளுக்கு 30 சதவீத வரி விதித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, எம்.எஸ்.ஓ.,க்களின் கட்டுப்பாட்டு அறையை அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறையாக அறிவிக்க வேண்டும். கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிர்வாகிகள் பாலமுருகன், மணிகண்டன், சித்ரா, முருகன், சண்முகம், சரவணன், புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ