| ADDED : செப் 11, 2011 10:58 PM
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 24.59 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர் விழுப்புரம் ரகுநாதன், மேல்மலையனூர் குமரதுரை ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில் 24.59 லட்சம் ரூபாய் ரொக்கமும், 176 கிராம் தங்க நகைகளும்,340 கிராம் வெள்ளி நகைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.கோவில் ஆய்வாளர் முருகேசன், மேலாளர் முனியப்பன் , அறங்காவலர் குழு தலைவர் துரை, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.Viluppuram District News