உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருந்திய நெல் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

திருந்திய நெல் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

செஞ்சி : வல்லம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் மேல்களவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. ஏரிபாசன சங்க தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் துரைசாமி கலந்து கொண்டு திருந்திய நெல் சாகுபடியில் நவீன கருவிகளை பயன்படுத்தும் முறை, கூடுதல் மகசூல் பெறும் வழிகள், பார்த்தீனியம் செடி அழிக்கும் முறை குறித்து விளக்கினார். நடப்பு ஆண்டில் அரசின் வேளாண்மை திட்டங்கள் குறித்து பென்னகர் துணை வேளாண்மை அலுவலர் கர்ணன் எடுத்து கூறினார். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மனுவேல், கோபால், மாணிக்கம் செய்திருந்தனர். முன்னோடி விவசாயி பூங்காவனம், விவசாய தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் ரவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை