| ADDED : ஆக 03, 2011 10:16 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் வசதிகள் அனைத் தும் உள்ளதால் மாணவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் என கல்லூரி டீன் தேன்மொழி கூறினார். விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக சென்னையில் தேர்வு குழு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த 2ம் தேதி பெற்றோர்களுடன் கல்லூரிக்கு வந்து வகுப்பில் சேர்ந்தனர்.
கல்லூரி வகுப்புகள் துவக்கம் குறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் தேன்மொழி தினமலர் நிருபரிடம் கூறியதாவது :கடந்தாண்டு முதல் பேட்ஜ் மாண வர்களுடன் மருத்துவ கல்லூரி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது முதல் பேட்ஜ் மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இரண்டாம் பேட்ஜ் முதலாம் ஆண்டு மாணவர்கள் மொத்தம் உள்ள 100 இடங்களில், அகில இந்திய மாணவர்கள் சிறப்பு பிரிவில் 15 மாணவர்களும், தமிழக மாணவர்கள் 85 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து 40 மாணவர்கள், 45 மாணவிகளுடன் கடந்த 2ம் தேதி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கையின் போது முன்பே அவர்கள் தேர்வு கமிட்டியில் சேர்க்கை கட்டணமாக 12 ஆயிரத்து 290 ரூபாய் வரைவோலை கொடுத்து விட்டனர். இங்கு விருப்பப்படும் மாணவர்கள் விடுதியில் சேர்க்கப்பட்டு அவர்களிடம் விடுதி கட்டணம் 14 ஆயிரத்து 850 ரூபாய் மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது. முதல் பேட்ஜ் மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு நடைபெறுவதால் சீனியர் மாணவர்கள் யாரும் கல்லூரியில் சேர்ந்துள்ள முதலாம்ஆண்டு மாணவ, மாணவிகளை வரவேற்க முடியவில்லை. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இக்கல்லூரியில் இருப்பதால் படிப்பில் கவனம் செலுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்லூரி டீன் தேன்மொழி கூறினார்.