உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆந்திர அரிசி 3,500 டன் சின்னசேலம் வருகை

ஆந்திர அரிசி 3,500 டன் சின்னசேலம் வருகை

சின்னசேலம் : ஆந்திர மாநிலத்திலிருந்து சின்னசேலத்திற்கு 3,500 டன் அரிசி வந்தடைந்தது. ஆந்திராவிலிருந்து சரக்கு ரயில் மூலம் 3,500 டன் அரிசி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தது. ஆந்திரா மாநிலம் பெண்ணிடா பகுதியிலிருந்து புழுங்கல் அரிசி 3,500 டன் 58 ரேக்குகளுடன் சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டது. இவை சின்னசேலத்தில் உள்ள அரசு வாணிப கழக சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டன. இப் பணியை இந்திய உணவு கழக மேலாளர் பன்னீர்செல்வம், சின்னசேலம் குடோன் மேலாளர் மாரிமுத்து, ஒப்பந்ததாரர் தியாகராஜன் மேற்பார்øயிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை