உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

விழுப்புரம் : இரும்பு பட்டறையில் மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளி இறந்தார். விக்கிரவாண்டி அடுத்த கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் விக்கிரவாண்டியில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் தடை செய்யப்பட்டிருந்தது. பட்டறையில் செல்வசக்கரை உள் ளிட்ட 50 கூலி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். பகல் 12 மணிக்கு மின்சப்ளை வழங்கப்பட்டபோது, மோட்டார்களுக்கு ஒயர் இணைப்பு கொடுத்து கொண்டிருந்த செல்வசக்கரை மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை