உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயத்திற்கு பயனற்ற இடத்தில்அரசு கல்லூரியை மாற்ற கோரிக்கை

விவசாயத்திற்கு பயனற்ற இடத்தில்அரசு கல்லூரியை மாற்ற கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூரில் விவசாயத்திற்கு பயனற்ற இடத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு கட்டடம் அமைக்க வேண்டுமென கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.திருவெண்ணெய்நல்லூரில் கடந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி துவக்கப்பட்டது. தற்போது இரண்டாமாண்டு சேர்க்கை துவங் கிய நிலையில் போதிய இடவசதியின்றி மாணவ, மாணவியர் அவதியடைகின்றனர். கல்லூரி கட்டுவதற்காக திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதியில் இடம் தேர்வு செய்தனர். அந்த இடம் நீர்பிடிப்பின் பகுதியில் வருவதாக கூறி ரத்து செய்துவிட்டு, மணக்குப்பத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் முள்ளிப் பள்ளம் ஏரி மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் சார்பில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:நாங்கள் முள்ளிப்பள் ளம் ஏரி மூலம் 50 ஏக்கர் நிலம் பயிர் செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியில் நீர் தேங்குவதில்லை. தண்ணீர் இல்லாததால் விவசாயம் சரிவர செய்வதில்லை. பேரூராட்சி எல்லையில் கல்லூரி கட்டப்பட வேண்டும் என்ற அடிப் படையில் விவசாயத்திற்கு பயன்படாத 44 ஏக்கர் நிலத்தில் கல்லூரி கட்டினால் நகரின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்தில் பல்வேறு அரசு கட்டங்கள் கட்டுவதற்கும் இந்த இடம் பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை