உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

விழுப்புரம்:மது பாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்யதனர்.விழுப்புரம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வளவனூர் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். வளவனூர் கடை வீதியில் ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 720 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் மற்றும் 24 பீர் பாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து கடத்திச் சென்றது தெரிய வந்தது.இது தொடர்பாக சென்னையை சேர்ந்த கேசவன்,29, பத்மநாபன் ,28 மற்றும் பார்த்திபன்,23 மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கார் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ