உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி கோவிலில்திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி கோவிலில்திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நித்ய திருக்கல்யாண உற்சவம் நேற்று துவங்கியது.கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி நித்ய திருக்கல்யாண உற்சவம் 30 நாட்கள் நடக்கிறது. நேற்று துவங்கிய திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் செய்து, மண்டபத்தில் எழுந்தருள செய்தனர்.விஸ்வக் சேனர் வழிபாடு, புண்ணியாகவசனம், முலைபாலிகை இடுதல், காப்பு கட்டுதல் போன்ற பூஜைகளுக்கு பின் யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.தொடர்ந்து தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை 30 நாட்கள் நடக்கவுள்ள திருக்கல்யாண உற்சவத்தை தேசிக பட்டர் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ